good post in FB

மக்களே! ஆசிரியர்களாகிய எங்களைப்போய் சமூதாய சிற்பிகள் என்று ஏன் இன்றும் அழைக்கிறீர்கள்? பிழைப்பை மட்டும் சொல்லிக்கொடுக்கும் எல்லாவகையான படிப்புகளும் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலை வந்துவிட்டது. (CERTIFICATE SELLERS) சான்றிதழ் விற்பனை செய்யும் வணிக முகவாண்மை நிறுவனங்களாக கல்வி நிறுவனங்கள் மாறிவிட்டன. இன்று ஆசிரியர் பயிற்சியிலேயே REGULAR (சென்று படிப்பது), IRREGULAR (செல்லாமல் படிப்பது) என்ற இரண்டு முறைகளில் சான்றிதழ் விற்பனை செய்யப்படுகிறது. பாடநூல் என்ற பெயரில் உள்ள தகவல்களை வாசித்துவிட்டோ அல்லது மனப்பாடம் செய்துவிட்டோ, அதில் ஏதோ சிலவற்றை தாளில் எழுதிக்கொடுக்கும் மதிப்பீட்டு முறையில் சமூக சிற்பிகளை எப்படி உருவாக்க முடியும்?
லஞ்சம், ஊழல், எல்லாவற்றுக்கும் ஒத்துப்போகும் குடிமக்களையும் சமூக அவலங்கள் எதைப்பற்றியும் கரிசனம் காட்டாத குடிமக்களையும் உற்பத்தி செய்யும் கல்வி அமைப்புக்குள் சிக்கிவிட்ட என்னைப் போன்றவர்களை சமூக சிற்பி என்று தயவு செய்து அழைக்காதீர்கள்.
ஆசிரியர்களாகிய நாங்கள் சமூக சிற்பிகளாக உருவாக்கப்பட்டிருந்தால் கோகுல்ராசுகளும் உடுமலை சங்கர்களும் சுவாதிகளும், வினுப்பிரியாக்களும் பலியாவது நடந்திருக்காது. மனித உறவு சார்ந்த எல்லா சிக்கல்களுக்கும் கத்தியும் இரத்தமும் மட்டுமே தீர்வல்ல என்பதைக் கூட நமது கல்வி ஏன் போதிக்கவில்லை? மனிதர்கள் சம உரிமையுள்ள பிறவிகளல்ல என்பதைப் போதிக்கும் ஒரு கருத்தியல் எப்படி இந்த நாட்டின் உயர் பண்பாடாக இருக்க முடியும்? இதற்கான மாற்றைப் போதிக்க கல்வியில் இன்று என்ன பாடத்திட்டம் இருக்கிறது?
உலகத்தையே யோகா கொண்டாடவைத்த நம்மால் கள்ளக்குறிச்சி தனியார் யோகா மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகள் வணிகவெறிக்குப் பலியானதைத் தடுக்க முடியவில்லை.. கல்வி வெட்ட வெளிச்சமாக வணிகமாக்கப்பட்ட இந்த சமூக அமைப்பில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி அன்றாட காட்சியாகும்.
எனவே எதிர்வினைகளைக் கல்வியில் இருந்து தொடங்கினால் நாம் உருப்படுவோம். சமூகப் பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கான விவாதங்களை கல்விக் களத்தில் இருந்து உருவாக்கவேண்டும். இதைச் செய்வதற்காக எதையும் செய்யாத என்னைப் போன்றவர்களை சமூக சிற்பி என்று பல மேடைப்பேச்சு வித்தகர்கள் குறிப்பிடுவதை ஏற்க முடியவில்லை.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos