2018-2019 ம் கல்வி ஆண்டில் நடைபெற
இருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு (JEE / NEET ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
11 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு
412 பயிற்சி மையங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பு மாணவர்களில் தகுதியானவர்களை
தெரிவுசெய்யும்பொருட்டு தகுதித் தேர்வு
14.08.2018 அன்று அந்தந்த பள்ளிகளில்
நடத்துவதற்கு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த
முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
NEET தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களை தெரிவு செய்ய 60 கேள்விகள் (இயற்பியல்
15 , வேதியியல் 15, தாவரவியல் 15, விலங்கியல் 15) கொண்ட வினாத்தாள் மற்றும் JEE பயிற்சி
பெறும் மாணவர்களுக்கு 45 கேள்விகள் (இயற்பியல் 15, வேதியியல் 15, கணிதம் 15) கொண்டவினாத்தாள்
மற்றும் இதற்கான விடைக் குறிப்புகள் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக
10.08.2018 அன்று(வெள்ளிக்கிழமை)அனுப்பப்படும்.
இத்தேர்விற்கான வினாக்கள் கடந்த11-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள
பாடங்களிலும் மற்றும் 12-ம் வகுப்பில் முதல்
இடைநிலைத் தேர்வுக்குரிய பாடப்பகுதிகளில் இருந்தும் இருக்கும் என்பதை மாணவர்களுக்கு
தெரிவித்து, தகுதித் தேர்வினை திறம்பட நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு
முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரத்தை,
அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அவற்றில் இருந்துஅனுப்பப்படும் மாணவர்களின் தெரிவுப் பட்டியலை
முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒன்றியம் வாரியாக
வகைப்படுத்தி, அவற்றுள் தகுதியுள்ள முதல்
50 மாணவர்கள் (அல்லது அதற்கு மேல் ) தெரிவுசெய்து அவர்களின் விவரங்களை, படிவம்-1-ல் பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும். மாணவர்கள் NEET மற்றும் JEE ஏதேனும் ஒரு தேர்விற்கு மட்டுமே தகுதி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். என்பதை அனைத்து தலைமையாசிரியர்களுக்கு
முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர்கள் தெரிவு செய்யும் 50 அல்லது
50க்கு மேல் உள்ள மாணவர்களின் பட்டியல் JEE மற்றும் NEET இரண்டு
போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி பெறுபவர்கள் ஆகும்.·
தனித்தனியே JEE மற்றும் NEET பயிற்சிக்கு 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்க தேவையில்லை.