TN DSE Stat

Tamilnadu statistics 2018 Educational Districts - 63 Schools Details Schools (Govt, Matric, Aided) - 47198 Nursery Schools - 3216 ...

Showing posts with label Court Case. Show all posts
Showing posts with label Court Case. Show all posts

LMS

 மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இயக்குனர் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்🙏🏻🙏🏻  

 COSELMS  

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற  வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரு இணையதளத்தில் பதிவிட்டு பள்ளிக் கல்வித் துறையில் அலுவலகத்தில் பணி புரியும் இளநிலை உதவியாளர்,  உதவியாளர்,  கண்காணிப்பாளர். நேர்முக உதவியாளர்.  மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இணை இயக்குனர்கள் இயக்குனர்கள் என அனைவரையும் ஒரே கட்டுமானத்திற்குள் கொண்டு வரச் செய்தது இந்த COSELMS  இணையதளம்.

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் அலுவலகங்களில் உள்ள நீதிமன்ற கோப்புகள் கடிதங்கள் ஆகியவற்றை பிரிவு பணியாளர்கள் கோப்பினை கையாண்டு கண்காணிப்பாளர் வாயிலாக அலுவலர்களுக்கு முன்னிலைப்படுத்தும் போது ஒரு பயத்துடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மனநிலை மட்டுமே இருந்தது.

 ஆனால் தற்பொழுது COSELMS  இணையதளம் நடைமுறைக்கு  வந்த பிறகு அனைத்து நீதிமன்ற வழக்குகளையும் ஒரு கையடக்க கைபேசிக்குள் கொண்டு வரச் செய்து அலுவலகத்தின் கடைநிலை அமைச்சுப் பணியாளர் முதல் துறையின் உயர் அலுவலர்கள் வரை அனைவரும் ஒருங்கிணைத்து நீதிமன்ற கோப்பினை நாங்கள் தொடர்ந்து கையாள்வதில் ஒரு மன தைரியம் ஏற்படுத்தியதற்கு காரணம் COSELMS இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டது தான் ஐயா.

 இதற்கு அமைச்சு பணியாளர்களின் சார்பாக  நன்றிகள் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை ஐயா.

 இப்படி அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான COSELMS இணைய தளத்தை எங்களுக்காக வடிவமைத்த தங்களுக்கும், இதனை கையாளுவதற்கு உரிய பயிற்சி அளித்து எங்களை கைபிடித்து அழைத்துச் சென்ற மதிப்பிற்குரிய இணை இயக்குனர் சாந்தி மேடம் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🏻.

தாங்கள் ஏற்றி வைத்த இந்த விளக்கின் வெளிச்சத்தில் நாங்கள் தொடர்ந்து வெற்றியுடன் பயணிப்போம் ஐயா.


இப்படிக்கு 

தங்களால் பயனடைந்த அமைச்சுப் பணியாளர்களில் ஒருவன்.

🙏🏻நன்றியுடனும் வணக்கத்துடனும்🙏🏻

வழக்குகளால் ஸ்தம்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை


கல்வித்துறையில், சட்ட நுணுக்கம் அறியாத அலுவலர்களிடம் வழக்குகள் சார்ந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மாநில அளவில் நிலுவை வழக்குகள், அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு, பள்ளி இடப்பிரச்னைகள் உட்பட தனிப்பட்ட நபர், குழு என பல்வேறு வழக்குகள் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வழக்குகள் அதிகரிக்க, தெளிவில்லாத அரசாணை, துரித செயல்பாடுகள் இன்மை , அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அமைந்துள்ளது.
இவ்வழக்குகளை, கையாள சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் இல்லை என்பது அவலம். கடந்த ஆண்டு, மாவட்ட வாரியாக சட்ட வல்லுனர்கள் நியமிக்கப்படுவார்கள் என இயக்குனர் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் என, தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றனர்.
உதவியாளர்களே நீதிமன்றங்களுக்கு தாக்கல் செய்யவேண்டிய பதில்களை தயார் செய்கின்றனர். சட்ட நுணுக்கம் சரியாக தெரியாததால் பதில்களை முறையாக தயாரிப்பதில்லை. இதனால் பல வழக்குகளில் கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்பு வருகின்றன. சில
நேரங்களில் பணிச்சுமையால் பதிலை தாக்கல் செய்வதில்லை. இதனால் அவமதிப்பு வழக்குகள் அதிகரிக்கிறது. உதவியாளர்கள், பெரும்பாலும் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்டவர்கள். மேலும், நீதிமன்ற கோப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால், அதனை படித்து புரிந்து கொள்வதற்கே திணறிவருகின்றனர்.
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 7000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோவை மாவட்டத்தில், தொடக்க கல்வித்துறையின் கீழ், 129 வழக்குகள் உட்பட, அனைத்து பிரிவுகளின் கீழ் சேர்த்து, 400 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க உயர்மட்ட குழு தலைவர் பால்ராஜ் கூறுகையில், '' பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாக செயல்பாடுகளுக்கு வழக்குகள் பெரும் தடையாக உள்ளது. இதை, சரிசெய்ய சட்ட வல்லுனர்களை நியமிக்கவேண்டியது கட்டாயம். மாவட்ட உதவியாளர்கள் அனைவரும், தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்கள். இவர்களை, வழக்குகளை கையாள சொல்வதால், சட்ட நுணுக்கங்கள், ஆங்கில புலமை இன்மை போன்ற காரணங்களால், அவமதிப்பு வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதற்கு தீர்வு ஏற்படும் வகையில், மாவட்ட வாரியாக சட்ட வல்லுனர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணங்களால், புதிய ஆசிரியர் பணிநியமனம், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம், டெட் தேர்வு அறிவிப்பு போன்ற உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக பணிகளை ஸ்தம்பித்துள்ளது,'' என்றார்
Comment

court order

குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதன் பிறகு, அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி வேலுசாமி திருச்சியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அவரது மனைவி தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். இதையடுத்து, விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வேலுசாமி மீது அவரது மனைவி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி வேலுசாமியை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது. பிறகு, 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி அந்த பணியிடை நீக்கத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பணியில் அமர்த்தியது.
ஆனால், 2014-15-ஆம் ஆண்டு பதவி உயர்வுப் பட்டியலில் வேலுசாமி பெயர் இடம்பெறவில்லை. மேலும், மீண்டும் பணியில் சேர்ந்தது முதல் ஊக்க ஊதியமும் வழங்கவில்லை.
இது குறித்து மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தனது பெயரை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கவும், ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வேலுசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. அதைக் காரணமாக்கி மனுதாரரின் பதவி உயர்வுக்கு தடை விதிக்க முடியாது.
இருதார மணம் செய்துள்ளார் என்ற புகாரை மனுதாரருக்கு எதிராகக் கொண்டுவர முடியாது. இவருக்கும் மனைவிக்கும் இடையேயான குடும்பத் தகராறை முகாந்திரமாகக் கொண்டு பதவி உயர்வை மறுக்க முடியாது. மனுதாரர் மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் ஊக்க ஊதியம் பெற உரிமை உண்டு. ஆனால், ஏன் ஊக்க ஊதியம் வழங்கவில்லை என்பதற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. தண்டனை அளித்திருந்தால் மட்டுமே மறுக்க முடியும்.
எனவே, மனுதாரருக்கு 8 வாரங்களுக்குள் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அவரது பதவி உயர்வு குறித்த மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Pension for worked 1 year

ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம்
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த 1988 ஜூன் 13ம் தேதி சந்திரசேகர் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சந்திரசேகரின் மனைவி ராதாபாய் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றியவரின் வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் தர முடியாது என்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் ராதாபாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுகாதாரத்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை கணக்காளர் தாக்கல் செய்த மனுவில், ஓய்வூதிய விதி 49 (2)ல் அரசு ஊழியர் இறந்தால் அவர் ஒரு ஆண்டுக்கு குறைவாக பணியாற்றியிருந்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அரசு ஊழியர் ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணி செய்த நிலையில் மரணமடைந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முதன்மை கணக்காளருக்கு சுகாதாரத்துறை அனுப்ப வேண்டும். ஓய்வூதியம் தருவது குறித்து முதன்மை கணக்காளர் முடிவு அறிவித்தவுடன் காலதாமதம் செய்யாமல் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியம் 1989 முதல் கணக்கிடப்பட்டு 10 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos