TN DSE Stat

Tamilnadu statistics 2018 Educational Districts - 63 Schools Details Schools (Govt, Matric, Aided) - 47198 Nursery Schools - 3216 ...

Showing posts with label Pension. Show all posts
Showing posts with label Pension. Show all posts

Pension for worked 1 year

ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம்
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த 1988 ஜூன் 13ம் தேதி சந்திரசேகர் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சந்திரசேகரின் மனைவி ராதாபாய் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றியவரின் வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் தர முடியாது என்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் ராதாபாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுகாதாரத்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை கணக்காளர் தாக்கல் செய்த மனுவில், ஓய்வூதிய விதி 49 (2)ல் அரசு ஊழியர் இறந்தால் அவர் ஒரு ஆண்டுக்கு குறைவாக பணியாற்றியிருந்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அரசு ஊழியர் ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணி செய்த நிலையில் மரணமடைந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முதன்மை கணக்காளருக்கு சுகாதாரத்துறை அனுப்ப வேண்டும். ஓய்வூதியம் தருவது குறித்து முதன்மை கணக்காளர் முடிவு அறிவித்தவுடன் காலதாமதம் செய்யாமல் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியம் 1989 முதல் கணக்கிடப்பட்டு 10 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos