TN DSE Stat

Tamilnadu statistics 2018 Educational Districts - 63 Schools Details Schools (Govt, Matric, Aided) - 47198 Nursery Schools - 3216 ...

திருக்குறள் பேச்சு போட்டி - ஸ்ரீராம் இலக்கிய கழகம்

திருக்குறள் பேச்சு போட்டி: வரும் 19ம் தேதி துவக்கம்
திருச்சி: தமிழகம், புதுவையில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே திருக்குறள் பேச்சு போட்டி வரும் 19ம் தேதி துவங்குகிறது.
ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் சென்னை அடையாறு, அம்பத்தூர் திருச்சி, வேலூர், புதுவை, நெல்லை, மதுரை, கும்பகோணம், கோவை, சேலம் உள்ளிட்ட 10 மையங்களில் வரும் 19ம் தேதி முதல் 24 ம் தேதி வரை திருக்குறள் பேச்சு போட்டிகள் நடக்கிறது. செப்டம்பர் 27ம் தேதி சென்னையில் இறுதிச்சுற்று நடக்கிறது.
நான்கு பிரிவுகளாக நடக்கும் பேச்சு போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் ஐந்து நிமிடங்கள் வரை பேச வேண்டும். (மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட) ஒரு பள்ளியில், ஒரு வகுப்பில் இரண்டு பேர் பங்கேற்கலாம்.
முதல் பரிசாக 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7,500 ரூபாயும், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்படும். மேலும் முதல் பரிசு பெறும் மாணவரது பள்ளி, கல்லூரிகளுக்கு தனியாக கேடையம் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பங்களை ஸ்ரீராம் சிட்ஸ், மதுரை ரோடு, திருச்சி என்ற முகவரியிலோ அல்லது 0431-4210130 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை வரும் ஜூலை 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos