TRUST

தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வுத் திட்டம் திட்டத்தின் சிறப்புக் கூறுகள்:               
1)  இத்தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.               
2) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பின்வரும் நிபந்தனைகளை பின்பற்றி இத்தேர்வு நடத்தப்படுகிறது               
    குடும்ப வருமானம் ரூ. 1,00,000/- க்குள் இருக்க வேண்டும்           
    எட்டாம் வகுப்பில் 50ரூ மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்           
    மாநில அரசின் இடஒதுக்கீட்டு அரசாணையின்படி தெரிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மேற்கொள்ளப்படுகிறது.           
3) சென்னை மாவட்டத்தை தவிர்த்து இதர 31 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்திலும் தலா 100 மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் தெரிவு செய்யப்படுகிறார்கள்.                
4) இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 9,10,11 மற்றும் 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1000/- வீதம்  மொத்தம் ரூ. 4000/- மாநில அரசால் வழங்கப்படுகிறது               
5) தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டு 31 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு தலைமையாசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.  இத்தொகை வழங்கப்பட்டபின் தலைமையாசிரியர்களிடமிருந்து பயன்பாட்டுச் சான்றிதழ் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியே பெறப்படுகிறது.               
6) ஒவ்வொரு ஆண்டிற்கான தகுதிவாய்ந்த மாணவர்களின் பட்டியல் சார்ந்த தலைமையாசிரியர்களிடமிருந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரையுடன் பெறப்படுகிறது.               

1 comment:

  1. I am looking for some good blog sites for studying. I was searching over search engines and found your blog site on IMT ASSIGNMENT
    . Well i like your high quality blog site design plus your posting abilities. Keep doing it.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos