TN DSE Stat

Tamilnadu statistics 2018 Educational Districts - 63 Schools Details Schools (Govt, Matric, Aided) - 47198 Nursery Schools - 3216 ...

half salary leave salary calculation

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை:
உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.
செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)
அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.
அப்படியானால்,
27 நாட்கள் அரை சம்பளம்,

4 நாட்கள் முழு சம்பளம் .
முதலில் உங்களின் அக்டோபர் மாத்தத்தின் ஒரு நாள் PAY-ஐ கண்டுபிடிக்க வேண்டும்.
காரணம் Pay-ஐ தவிர மற்ற அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.DA அறிவிக்கப்பட்டிருந்தால் புது DA தொகையினையும், அந்த மாதம் தங்களுக்கு Increment எனில் அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
>Pay-13,380/31=431.61
(ஒரு நாள் Pay)
>Half pay=431.61/2=215.8
(அரை நாள் Pay)
27 days half pay=215.8*27=5826.
4 days full pay= 431.61*4=1726.4
Pay-7553 (5826+1727) + DA-8697 (72%)+ HRA-760+ MA-100=17,110.

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர் - கிளர்க் அடிதடி


திருப்புவனம்: திருப்புவனம் அருகே கரிசல்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியர், கிளர்க் இடையே மோதல் ஏற்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்புவனம் பொட்டப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மலைச்சாமி. எழுத்தராக அழகர்சாமி உள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்க நிதியை செலவழித்தது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டபோது பிற ஆசிரியர்கள் விலக்கினர்.
நேற்று காலை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே இருவரும் அடித்துக் கொண்டனர். தலைமையாசிரியர் மலைச்சாமி தாக்கியதில் காயமடைந்த எழுத்தர் அழகர்சாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறுகையில், "தலைமை ஆசிரியர் தினமும் தாமதமாக வந்து விட்டு வருகை பதிவேட்டில் திருத்தம் செய்வார். பள்ளி நிதியை முறைகேடாக செலவழித்து விட்டு கணக்கு எழுதச் சொன்னார். மறுத்ததால் மாணவர்கள் முன்னிலையில் இரும்புக் கம்பியால் தாக்கினார்" என்றார்.
தலைமையாசிரியர் மலைச்சாமி கூறுகையில், "சம்பவம் குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்" என்றார். முதன்மை கல்வி அலுவலர் செந்தில்முருகன் கூறுகையில், தகராறு குறித்து விசாரித்து வருகிறேன்" என்றார். மாவட்ட கல்வி அலுவலர் நீலவேணியிடம் கேட்டபோது, விசாரித்து விட்டு பதில் கூறுகிறேன்" என்றவர், பின்னர் தொடர்பு கொள்ளவே இல்லை.

Shops for government staff

Rank card, & School CCE Records
J.Rani Offset Printers (suganthi kalvi mandram)
46, PTR road, narimedu, madurai - 2
Ph:0452 2539826
Mob: 9677531082

Siruvar Kala Mandram
Madurai


For Departmental Exam books
Account Test Center (ATC)
1, Convent Lane
Kamarajar salai
Madurai-625009
Tamilnadu
Mob: 9345975334, 9344103065

 

EL

ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்:
* தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து
பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும்.
* தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக் கொள்ளப்படும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)
* வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .
* மீதமுள்ள 2 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்அதை ஓய்வுபெறும்பொழுது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
* 21 நாட்கள் ML எடுத்தால்ஒரு நாள் EL கழிக்கப்படும்.
* வருடத்திற்கு மொத்தம் 365நாட்கள்.இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.
* எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்றகணக்கில் கழிக்கப்படுகிறது.
* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
* ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.்
* அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல்சேருபவை எந்தவிதத்திலும்பயனில்லை.
*மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால்அனுபவிக்காதபணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும். 90 நாட்களுக்குள்கணக்கில் சேர்க்கப்படவேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)
*ஒருமுறை சரண்டர் செய்தஅதே தேதியில் தான்ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம்குறிக்க எளிமையாகஅமையவும் ஒரே தேதியில்ஆண்டுதோறும்அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.எவ்வாறாயினும்ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்அடுத்தஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில்ஓராண்டு / 30 நாட்கள்ஒப்படைப்பெனில்இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.
* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும்தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்படவேண்டியதில்லை.
* EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும்பின்னர் முன்தேதியிட்டு DAஉயர்த்தப்படும்போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும்இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும்நிலுவைக் கணக்கீட்டுக்காலத்தில்ஒப்படைப்பு தேதி வந்தால்சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.
* பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம்மற்றும்அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.
* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது.
Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos