News

'என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் ஆகும்; அப்போது கணிசமாக சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கையை நன்றாக நகர்த்தலாம்' என்ற, கனவுகளுடன், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், தற்காலிக அடிப்படையில், துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த, 30 ஆயிரம் பேர், வாழ்க்கையை தொலைத்து விட்டு, அல்லல்படுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, தொடர்ந்து, மாதம், வெறும், 100 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர்.கல்வித் துறையில், 'மீட்டிங்'குகளுக்கு, பஞ்சமே கிடையாது. மாதத்திற்கு, குறைந்தது, 20 கூட்டங்களாவது நடக்கின்றன. அமைச்சர் முதல், மாவட்ட கல்வி அலுவலர் வரை, பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால், அடிமட்டத்தில் உள்ள ஊழியர்கள் பிரச்னைகள் தெரியாமல் போவது ஏன் என்பது தான் புதிராக உள்ளது. பிரச்னைகளைப் பற்றி அறிய, கீழ்நிலை அலுவலர்களையும், கூட்டங்களில் பேச அனுமதிக்க வேண்டும். அப்போது தான், உண்மை நிலையை, உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும்; பிரச்னைகளை தீர்க்க முடியும். இது போன்ற நிலை வராதவரை, முத்துகுமரன் போன்றோர், எங்கோ ஒரு மூலையில், அல்லாடிக்கொண்டிருக்க வேண்டியது தான்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos