மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இயக்குனர் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்🙏🏻🙏🏻
COSELMS
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரு இணையதளத்தில் பதிவிட்டு பள்ளிக் கல்வித் துறையில் அலுவலகத்தில் பணி புரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர். நேர்முக உதவியாளர். மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இணை இயக்குனர்கள் இயக்குனர்கள் என அனைவரையும் ஒரே கட்டுமானத்திற்குள் கொண்டு வரச் செய்தது இந்த COSELMS இணையதளம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் அலுவலகங்களில் உள்ள நீதிமன்ற கோப்புகள் கடிதங்கள் ஆகியவற்றை பிரிவு பணியாளர்கள் கோப்பினை கையாண்டு கண்காணிப்பாளர் வாயிலாக அலுவலர்களுக்கு முன்னிலைப்படுத்தும் போது ஒரு பயத்துடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மனநிலை மட்டுமே இருந்தது.
ஆனால் தற்பொழுது COSELMS இணையதளம் நடைமுறைக்கு வந்த பிறகு அனைத்து நீதிமன்ற வழக்குகளையும் ஒரு கையடக்க கைபேசிக்குள் கொண்டு வரச் செய்து அலுவலகத்தின் கடைநிலை அமைச்சுப் பணியாளர் முதல் துறையின் உயர் அலுவலர்கள் வரை அனைவரும் ஒருங்கிணைத்து நீதிமன்ற கோப்பினை நாங்கள் தொடர்ந்து கையாள்வதில் ஒரு மன தைரியம் ஏற்படுத்தியதற்கு காரணம் COSELMS இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டது தான் ஐயா.
இதற்கு அமைச்சு பணியாளர்களின் சார்பாக நன்றிகள் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை ஐயா.
இப்படி அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான COSELMS இணைய தளத்தை எங்களுக்காக வடிவமைத்த தங்களுக்கும், இதனை கையாளுவதற்கு உரிய பயிற்சி அளித்து எங்களை கைபிடித்து அழைத்துச் சென்ற மதிப்பிற்குரிய இணை இயக்குனர் சாந்தி மேடம் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🏻.
தாங்கள் ஏற்றி வைத்த இந்த விளக்கின் வெளிச்சத்தில் நாங்கள் தொடர்ந்து வெற்றியுடன் பயணிப்போம் ஐயா.
இப்படிக்கு
தங்களால் பயனடைந்த அமைச்சுப் பணியாளர்களில் ஒருவன்.
🙏🏻நன்றியுடனும் வணக்கத்துடனும்🙏🏻