சரிபார்ப்பு பட்டியல்


 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு
1.    12 கலம் கொண்ட படிவம்
2.    முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிநியமன ஆணை நகல் (ஹயீயீடிiவேஅநவே டிசனநச) /உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்ட ஆணை நகல்.
3.    முறையான நியமனம் முதன் முதலில் பணியில் சேர்ந்த நாள் பதிவு செய்யப்பட்ட  பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகல் அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு நியமன பதிவு நகல் இணைக்கப்படவேண்டும்.
4.     முதுகலை ஆசிரியர் பதவியில் முறையான நியமன ஆணைநகல் அல்லது முறையான நியமனமாக  முறைப்படுத்தப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பணிப்பதிவேட்டின் பக்க நகல் அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியில் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட ஆணைநகல் இணைக்கப்படவேண்டும்.
5.    முதுகலை ஆசிரியர் எனில்  தகுதிகாண் பருவ ஆணை நகல் இணைக்கவும்.
6.    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனில் கூசுக்ஷ சுயமே சூடி கண்டிப்பாக படிவத்தில் தெரிவிக்கப்படவேண்டும்.
7.    பிறதுறையிலிருந்து அலகு விட்டு அலகு (அ) ஈர்த்துக் கொள்ளப்பட்டவர் எனில் அவ்வாணையின் நகல் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேர்ந்த நாள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகலினை இணைக்கவும்.
8.     10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் இணைக்கவும்.
9.     12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் இணைக்கவும்.
10.     இளங்கலை பட்டப்படிப்பு பட்டச்சான்று மற்றும் மூன்று ஆண்டுகள் பயின்றமைக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் நகல் இணைக்கவும்.
11.     முதுகலை பட்டப்படிப்பு பட்டச்சான்று மற்றும்  மதிப்பெண் பட்டியல்கள் நகல் இணைக்கவும்.
12.     பி.எட்., பட்டப்படிப்பு பட்டச்சான்று மற்றும்  மதிப்பெண் பட்டியல்கள் நகல் இணைக்கவும்.
13.    வெளிமாநில சான்று எனில் மதிப்பீடு செய்யப்பட்ட ஆணை நகல் இணைக்கவும்.
14.    துறைத்தேர்வு தேர்ச்சி பெற்றதற்கான பெயர் வெளியிடப்பட்ட அரசிதழ் நகல்(சூயஅந க்ஷரடடநவin) இணைக்கவும்.
15.    இதற்குமுன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை தற்காலிக உரிமைவிடல் செய்திருப்பின் அவ்வாணை நகல் மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட நகல் தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் இணைக்கவும்.
16.    பணிப்பதிவேட்டின் முதல் பக்க நகல்(ளுசு குசைளவ ஞயபந) இணைக்கவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos