7th paycommission government job

Benefits for Government by this new 7th CPC:
  1. Government Quarters rent increased by doubled
  2.  IT payers increased
  3. Reduced expenses in future DA arrears by removed Gradepay, PP, SP
  4. Increased CPS deduction amount which is used for various other purposes for government expenses


அரசு ஊழியர்களுக்கு எதிராக மக்களை தூண்டுகிறதா தமிழக அரசு?
✍🏻 மணவாளன், வாடிப்பட்டி.
பயனில்லாத ஊதிய உயர்வை, பிரமாமாண்ட மாயை தோற்றம் கொண்ட அறிவிப்பாக அறிவித்த கையோடு, மதுபான விலையையும் ஏற்றியுள்ளது தமிழக அரசு. நீதி மன்றமே தலையிடும் அளவுக்கு தொடர் போராட்டங்கள் மூலம் அரசை அதிர வைத்த அரசு ஊழியர்களை பழிவாங்கி, வஞ்சிகும் துரோகத்தை இந்த அரசு மிக தைரியமாகவே நிறைவேற்றி உள்ளது என்று தான் இதை பார்க்க வேண்டியுள்ளது.
CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பு ஊதிய முறை நியமனங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அரசு செவி மடுக்கவில்லை.
இதை தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தனர். நீதிமன்றம் தானாக தலையிடும் அளவுக்கு நிலைமை எல்லை மீறியது. நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் ஆஜராகும் அளவுக்கு விபரீதமாகிப்போனது. இதில் ஆட்சியாளர்கள் ஆத்திரம் கொண்டார்களோ இல்லையோ, அவர்களோடு இருக்கும் அதிகாரிகள் வர்க்கம் ரெம்பவே கொதித்து தான் போனது. கவுரவ குறைச்சலாகவே பலரும் இந்த நிகழ்வை பார்த்தனர். அடிப்படை ஊழியர்களுக்கு கொஞ்சமும் பயனே இல்லாத ஊதிய குழு அறிவிப்பை, வஞ்சகத்தோடு அறிவித்து, சூழ்ச்சியால் வென்று விட்டனர் என்றே இதை கருத வேண்டியுள்ளது. *2.57 மடங்கு ஊதிய உயர்வு என அறிவித்து, மக்களின் ஒட்டுமொத்த வயிற்று எரிச்சலையும் அரசு ஊழியர்கள் பக்கம் திருப்பியுள்ளனர்.*
ஊடகங்கள் விசாரிக்காமல் கூட அரசின் அறிவிப்பை விட ஒரு படி அதிகமாகவே மக்கள் மத்தியில் வெறுப்பை உமிழும், மனம் கொதிக்கும் தலைப்புகளோடு செய்திகளை வெளியிட்டன. இவனுங்களுக்கு என்ன கேடு?
இவ்வளவு காசை அள்ளிக் கொட்ட வேண்டுமா? என்கிற ரீதியில் ஏகபோக வசனங்கள் காலை டீக்கடையில் துவங்கி, நள்ளிரவு ஏசி பார்கள் வரை நாள் முழுதும் எதிரொலித்தன. ஏதோ குறைந்த அளவிலாவது பணப்பலன் கிடைக்குதே என அரசு ஊழியர் தரப்பு கொஞ்சம் ஆசுவாசப்படுவதற்குள் மீண்டும் அடுத்த வஞ்சக திட்டமும் நடைமுறைக்கு வந்து விட்டது.
மது பானம் விலை திடீரென உயர்த்தப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுத்ததால் தான் கஜானா காலியானது, அதனால் தான் இப்போது விலை உயர்த்தப்பட்டது என்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டது. அரசு ஊழியர்கள் பொண்டாட்டி பிள்ளைகளோடு ஏசி ரூமில் தூங்கிட, நாங்கள் குடித்து சாக வேண்டுமா?
அரசு ஊழியர் குடும்பங்கள் வாழ எங்கள் மனைவிமார் தாலி அறுக்க வேண்டுமா என ஏகபோக வசனங்கள் சாலைகளிலும், பொது இடங்களிலும் எதிரொலித்தன. அரசு ஊழியர்கள் மீது மக்கள் மத்தியில் அதிர்ப்தி வர வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த நிகழ்வுகளை பார்க்க வேண்டியுள்ளது. போராட்டம் என்ற பெயரில் அரசை அதிர செய்தவர்களை பழி வாங்கும் நோக்கில் தான் இது நடந்துள்ளது என்று நடுநிலையாளர்களால் உணர முடிகிறது.
👉🏻 ஊதிய முறன்பாடுகள் களைய நடவடிக்கை இல்லை.
👉🏻 தொகுப்பூதிய தோழர்கள், பகுதி நேர பணியாளர்களுக்கு விடிவு இல்லை.
👉🏻 ஊதிய உயர்வை மிகப்படுத்தி, இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது என மக்கள் மத்தியில் போலியான பிம்பம்.
👉🏻 சக பணியாளர்கள் சங்கங்கள் இடையே பிளவு ஏற்படுத்தியது. அவர்களை வைத்தே ஊதிய குழு நியாயம் தான் என்று கூறவைத்தது.
இவை எல்லாம் இயல்பாய் நடந்தது போல இல்லை.
அடுத்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே அரசு ஊழியர் சமூகம் சந்திக்க இருப்பதை இப்போதே உணர்ந்து கொள்ள முடிகிறது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தை குறை கூறும் அறிவாளிகள் தயவு செய்து இதை படிக்கவும்.,,,,,உங்களை மாதிரி எத்தனை பேர் கிளம்பி இருக்கிங்க அரசு ஊழியர்களை குறை கூற,,,,,
குறை கூறுவதற்கு முன் ஒரு நிமிடம் இதை படிங்க
அரசு ஊழியர்னா எல்லாரும் லஞ்சம் வாங்குவாங்கனு அர்த்தமா,,,,.
அரசு ஊழியர்கள்ள பல துறைகளில் வாங்குகிற சம்பளத்துக்கு மேல ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது அது தெரியுமா.
என்ன இது ரமணா படமா இல்ல இந்தியன் படமா,,,,
பேங் ல கோடி கோடியா பணத்தை பார்த்தாலும் ஒரு ரூபா குறைந்தால் கூட கையில இருந்து கட்ட வேணும் தெரியுமா?
இரவு பகல் பாக்காம பனி ,, மழை பாக்காம குடும்பத்தை விட்டுவிட்டு மைனஸ் 50 டிகிரில எல்லையில பாதுகாப்பு பணியில் இருக்குறேமே அது உங்க கண்களுக்கு தெரியாதா ?
பெரிய பெரிய அதிகாரிங்க லஞ்சம் வாங்குனா எல்லாரும் வாங்கறாங்கனு அர்த்தமா,,,,
பத்து பைசா கூட லஞ்சம் வாங்காம எத்தனை கடை மட்ட ஊழியர்கள் இருக்காங்கனு தெரியுமா,,,,,
எதுவுமே தெரியாம மொத்தமா எல்லா அரசு ஊழியர்களை குறை கூறுவது
மேலே அன்னார்ந்து பார்த்து எச்சில் துப்புவதற்கு சமம்,,,,,,
அரசு ஊழியர்கள் இல்லாம உங்கள் வாழ்க்கையில் எந்த வேலையும் நடக்காது.,,,,
அரசு மருத்துவமைலை ராத்திரி 12 மணிக்கு ஆப்ரேஷன் நடக்குதா இல்லையா னு போய் பாரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் போய் பாரு 9 மணிக்கு மேலயும் வேலை செய்ற நேர்மையான எத்தனை அரசு ஊழியர்கள் இருக்காங்கனு தெரியும்.,,,,
சனி , ஞாயிறு., பண்டிகை தினம் கூட பாக்காம பணிக்கு செல்பவர்களை நீங்கள் பார்த்தது இல்லையா அரசு பள்ளி போய் பாறுங்க சொந்த வேலையை விட்டுட்டு Special Class எடுக்கிற எத்தனை ஆசிரியர்கள் இருக்காங்கனு .,,,,,,
வெளிநாட்டு நிருவனங்களுக்காக லட்சக் கணக்குல சம்பளம் வாங்கிட்டு Ac room ல வேலை செய்றவங்களுக்கு மத்தியில சில ஆயிரங்களை பெற்று கொண்டு பொது மக்களுக்காக வேலை செய்ற எங்களை குறை கூற உங்களால எப்படி முடியுது.,,,,,
யாரோ ஒரு தாய், யாரோ ஒரு பெண் தன் கணவன் பிள்ளைக்கு துரோகம் செய்றாங்கனா எல்லா தாயை யும் குறை கூற முடியுமா,,,,,,,,,
மழை, வெள்ளம் வந்தால் தன் குடும்பத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்யும் காவல்துறை, தீயனைப்புதுறை, மின்சாரவாரியம், இரானுவம், இரயில்வே,ஊராட்சி அலுவலர்கள்,போக்குவரத்துறை, போன்றவர்களை நீங்கள் மறந்தால் அது கடவுளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகாதா? "
இரவு இரயில்ல ஏறி நிம்மதியா படுத்து காலையில போக வேண்டிய இடத்துல இறங்குறீங்களே உங்களுக்கு தெரியுமா நீங்க உறங்கிட்டே போறதுக்காக எத்தனை இரயில்வே ஊழியர்கள் இராத்திரி பூரா கண்விழிக்குறாங்கன்னு ?
அது போன்ற சமயங்களில் மட்டும் அரசு ஊழியர்கள் தேவை மற்ற சமயங்களில் தேவையில்லையா?
தனி ஒருவன் படத்தில் ஒரு அருமையான வசனம்
் " ஒரு இருப்பிட சான்றோ, வருமான சான்றோ, அது போன்று எது வேண்டும் எனிலும் அதற்கான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் ஆனால் கடைசி நேரத்தில்தான் அனைவரும் செல்கின்றனர் சான்றுகள் சீக்கிரம் வேண்டும் என நீங்களே லஞ்சம் கொடுத்து வாங்கி விட்டு அரசு அதிகாரிகளை ஏன் குறை கூறுகிறீர்கள்?"
1990ல் இருந்த விலைவாசி இப்பொழுதும் இருந்தால் நாங்களும் 1990ல் இருந்த அதே சம்பளம் பெற்று கொள்கிறோம் .
வேலையில்லா பட்டதாரி என்பதற்காக எதைபற்றியும் முழுசாக தெரியாமல் படித்த திமிரில் அதி மேதாவி தனமாக அரசு ஊழியர்களை குறை கூற உங்களுக்கு தகுதி இல்லை :
18 மாதம் வேலை செய்தால் வாழ்நாள் முழுவதும் பென்சன் பெறுகிறார்கள் MP MLA ..,,,,,இதை தட்டி கேட்க ஒருவருக்கும் துப்பில்லை
30 வருடம் அரசுக்கும் மக்களுக்கும் வேலை செய்கிறோம்,,,,, எங்களுக்கு பென்சன் தர அரசு மறுக்கிறது..,,, அரசு ஊழியர்கள் வயிறு பற்றி எரிகிறது..,,,,,
தயவு செய்து பற்றி எரியும் வயிற்றில் எண்ணை ஊற்றாதிர்கள்.,,,,,,
எங்கள் சுயநலத்தை மறந்து விட்டு பொது நலத்துக்காக 1 ரூபாய் கூட லஞ்சம் பெறாத ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களில் ஒருவன் நான் என்பதை பெருமையுடன் கூற கடமை பட்டுள்ளேன்.,,,,,
நீங்கள் நேர்மையான அரசு ஊழியர் என்றால்,, அல்லது உங்கள் குடும்பத்தில் நேர்மையான அரசு ஊழியர்கள் இருந்தால்,,,,,, இதை பகிருங்கள்.,,,,,

ஊழியர் பெற்று வரும்
மொத்த சம்பளத்தில்
30 % வரை ஊதிய உயர்வு என்று சொல்வது தவறான தகவல்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.
நமது தமிழ்நாடு அரசு 11/10/2017 புதன்கிழமை
இணையதளத்தில் அரசாணை வெளியிட்டுள்ளது
ஊதியக்குழு
புதிய அரசாணை வெளியீடு 13/10/2017
305, HRA CCA
306, OTHER ALLOWANCES
307, Classification of Employees
Maximum
98 % of Government Servants have
Festival Loan,
GPF Loan,
Society’ Loan,
Bank Personal Loan, Bank Loan (other source) Housing Loan,
Two Wheeler Loan,
Car Loan (Officers level), Children’s Marriage Loan,
Education Loan & Kadi Kraft Loans
பெரும்பாலான 98 % விழுக்காடு அரசு ஊழியர்களுக்கு மேற்படி கடன்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்… ???
பொது மக்கள் இதை அறிவார்களா….????
அரசு ஊழியர்கள் குடும்பத்தின் மீது உண்மை அறியாமல் வசை பொழியும் உறவினர்களும் நட்புகளும் மற்றவர்களும்தான் இந்த கடன்களை அடைப்பார்களா…???
தயவு செய்து உண்மையாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் தர்மத்திற்கு உட்பட்டு சிந்திக்கவும் + பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.
அரசு ஊழியர்களுக்கு
இரண்டரை மடங்கோ
அல்லது
மூன்று மடங்கோ மொத்த ஊதியம் உயர்த்தி வழங்க வல்லரசு நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்கா , சீனா & ரஷ்யா வால் கூட முடியாது.
Thanks to facebook writers/shares

1 comment:

  1. how to get 1500 fast In today's world, there are so many options and so few constraints. With so much to see and do make $300 a day with zero investment We'll teach you everything you need to make the most of your time and achieve your goals without sacrificing quality or convenience.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos