Internal Marks Entry

சுற்றறிக்கை

 2017  –  2018 கல்வியாண்டில்  மேல்நிலை  முதலாம்  ஆண்டு  பயிலும்  மாணவர்களுக்கு  பள்ளியில் வழங்கப்பட்ட  அகமதிப்பீட்டிற்கான  மதிப்பெண்களை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி
இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும்.
1.   அகமதிப்பீட்டிற்கான  பாடக் குறியீடுகள்

  மேல்நிலை  முதலாம்  ஆண்டு  மாணவர்களது  அகமதிப்பீட்டு  மதிப்பெண்களை  பதிவு செய்வதற்கு  ஏதுவாக,  ஒவ்வொரு  பாடத்திற்கும்  ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ள  பாடக் குறியீடுகள்  (ளுரதெநஉவ  உடினநள   கடிச  ஐவேநசயேட  அயசமள )  விவரம்    இத்துடன் இணைத்தனுப்பப் படுகிறது.

2.  வருகைப் பதிவிற்கான மதிப்பெண்களை கணக்கிடுதல்

  2017 –  2018  கல்வியாண்டில்  ஆரம்ப  நாள்  முதல்  31.01.2018  வரை  மாணவர்கள் பள்ளிக்கு  வருகை  புரிந்த  நாட்களைக்  கணக்கிட்டு,  அதன்    அடிப்படையில்  வருகைப் பதிவிற்கான  மதிப்பெண்களை  பார்வை  2- ல்  காணும்  செயல்முறைகளில்  வழங்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி கணக்கிட வேண்டும்.

 3.  வெற்று மதிப்பெண்  பட்டியலை பதிவிறக்கம் செய்தல்

  பள்ளித்  தலைமையாசிரியர்கள்  தங்களுக்கு  ஏற்கனவே  வழங்கப்பட்டுள்ள    ருளுநுசு ஐனு மற்றும்  ஞயளளறடிசன- ஐ பயன்படுத்தி, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான  பெயர்பட்டியலில்  இடம்  பெற்றுள்ள  தங்களது  பள்ளி  மாணவர்களது  அகமதிப்பீட்டு மதிப்பெண்களை  பதிவு  செய்வதற்கான  வெற்று  மதிப்பெண்  பட்டியலை  இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். 

4.   வெற்று மதிப்பெண்  பட்டியலை   பூர்த்தி செய்து,  அக  மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம்  பதிவேற்றம் செய்தல் 
அகமதிப்பீடு   மதிப்பெண்களுக்கான  ஒருங்கிணைக்கப்பட்ட  படிவத்தில்  உள்ள வாறு ஒவ்வொரு  பாடத்திற் கும்  மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட  மதிப்பெண்களை,  மேற்குறிப்பிட்டவாறு  பதிவிறக்கம்  செய்த  மதிப்பெண்  பட்டியலில்  பதியவேண்டும்.  அதன் பின்னர்,  அம்மதிப்பெண்களை  தலைமையாசிரியர்  தங்களுக்கு  வழங்கப்பட்ட ருளுநுசு  ஐனு மற்றும்  ஞயளளறடிசன-ஐ  பயன்படுத்தி,  பிற்சேர்க்கையில்  குறிப்பிட ப்பட்டுள்ள  தேதியில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

  பெயர்பட்டியலில்  இடம்  பெற்றுள்ள  தங்கள்  பள்ளி  மாணவர்கள்  அனைவரது  அக மதிப்பீட்டு  மதிப்பெண்களும்  பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளதா  என்பதை  பள்ளி தலைமையாசிரியர்  உறுதி  செய்து  கொள்ள  வேண்டும்.  எந்த  ஒரு  மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது.

  பூர்த்தி  செய்யப்பட்ட  மதிப்பெண்கள்  பட்டியல்களை,   பாடவாரியாகவும்,   பதிவெண் வாரியாகவும்  அடுக்கி,  கட்டுகளாக  கட்டி,  அக்கட்டின்மீது  கீழ்க்கண்ட  விவரங்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும்.


5.   அக  மதிப்பீட்டிற்கான  மதிப்பெண்களை  பதிவு  செய்த  மதிப்பெண்  பட்டியலை ஒப்படைத்தல்

  பள்ளித்  தலைமையாசிரியர்கள்  /  முதல்வர்  மேற்குறிப்பிட்டவாறு  கட்டப்பட்ட மதிப்பெண்  பட்டியல்  கட்டுகளுடன்,  இத்துடன்  இணைத்தனுப்பப்பட்டுள்ள  மாதிரிச் சான்றினை  பூர்த்தி  செய்து   இணைத்து,  சம்பந்தப்பட்ட  மாவட்டக்  கல்வி  அலுவலகத்தில் 26.0 3 .2018-க்குள் ஒப்படைக்க வேண்டும். 

  மாவட்டக் கல்வி  அலுவலர்கள்  தங்களது  ஆளுகைக்குட்பட்ட  அனைத்து  பள்ளித் தலைமையாசிரியர்களிடமிருந்து  அகமதிப்பீட்டு  மதிப்பெண்கள்  பதிவு  செய்த  படிவங்களை பெற்றுக் கொண்ட பின்னர், அவற்றை  பள்ளி / பதிவெண் வாரியாக  அடுக்கி, கட்டுகளாக கட்டி,  அக்கட்டுகளில்  இணை  இயக்குநர்  (மேல்நிலை),  அரசுத்  தேர்வுகள்  இயக்ககம், சென்னை –  600  006  என்ற  முகவரியினை  எழுதி,  அவற்றை  28.03.2018  அன்று  தனிநபர்
மூலம் சம்பந்தப்பட்ட  அரசுத்  தேர்வுகள்  மண்டலத்  துணை  இயக்குநர்  அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். 

1 comment:

  1. Usually I never comment on blogs but your article is so convincing that I never stop myself to say something about it. You’re doing a great job Man,Keep it up. Meanwhile visit our website for Nmims solved project 2022

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos