collector schools

District Collectors as School correspondents Madurai - Balamandiram HSS, Viswanathapuram Thanjavur - Arasar HSS, Thanjavur

நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி

8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி
பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி 2 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறும். மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். மாவட்ட அளவிலான பயிற்சி ஜூலை மாதம் 7ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 நாள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 629 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.28 லட்சத்து 81 ஆயிரத்து 800 இந்த பயிற்சிக்காக செலவிடப்பட உள்ளது. 38 மையங்களில் இந்த பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் இணைந்து இந்த பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos